அவள் அவளாய் இருக்கிறாளா?

நான்,
நானாய் இருப்பது
அவளிடம் மட்டும்;

மிருகமாய் பல நேரம்
மிருதுவாய் சில நேரம்!

அவள்,
அவளைத் தொலைக்கிறாள்;
நான்,
அதைப் பார்க்கிறேன்;
அவள் கண்களில்,
நாணத்தை பார்க்கிறேன்;


அவள்,
'அவளை' தொலைத்து
என் 'நானை' காப்பாற்றுகிறாள்!


ஆனாலும்,
அவள் அவளாய் இருக்கிறாளா?


- பொன்னியின் செல்வன் -

2 comments:

" உழவன் " " Uzhavan " said...

உங்களின் நிறையக் கவிதைகளைப் படித்தேன். நன்றாக உள்ளது

பொன்னியின் செல்வன் said...

_/!\_ உழவன் அவர்களே, வருக. மிக நன்றி! தொடர்ந்து வருக! கருத்தை தருக!

Post a Comment

 
Wordpress theme designed by antisocialmediallc.com